அலைஞனின் அலைகள்: புலம்

Thursday, August 09, 2007

me, myself & my EGO (அ) என்ன(னை) எதிர்(ரி)பார்க்கிறீர்கள்?

புலம் - 22

இவ்விடுகை நான், எனது, என் 'தான்' எந்திரத்தைப் பற்றிய புகைபோக்கல் மட்டுமே. வேறில்லை. ஈழம், டிஎம்ஐ, வேழம், டிஎம்எஸ் பற்றி வா சிக்கவென்று எவரையும் நான் அழைக்கவில்லை. வந்து சிக்குவதும் செருகுவது அவரவர் உத்தம, உன்மத்த மத்தளமனதைப் பொறுத்தே என்றாகுக.

வலைப்பட்டறையிலே நான் 'கலந்து' கொண்டிருந்தாலும், என் படம் எப்பதிவிலுமே தோன்றாததாலும் சித்தஞ்சிதறிச்சட்னிவடை எல்லோருக்கும் படம்போட்டுப் பதிவு போட்டாலும் எனக்குப் படம் போடாமலே பதிவு போடுவதாலும், இங்கே என் படமும் பட்டறை/றிந்தார்படப்பட்டியலிலே இணைக்கப்பட்டிருக்கின்றது. இது, இவ்விடுகையை, என் ஈகோவை, சட்னிவடையை, வலைப்பதிவர்பட்டறையை முழுமைப்படுத்துமென்பதிலே மகிழ்ச்சியடைகிறேன்.


காலச்சுவடு 1996 செப்ரெம்பரிலே சிவசேகரம் அளித்த நேர்காணலுக்கான அ. யேசுராசாவின் எதிர்வினையிலே ஒரு பகுதி:
1. "தமிழ்த்தேசியவாதம் தமிழர் நலனைப் பிறரது நலன்களைவிடவும் முக்கியமானதாகக் கொள்கின்றபோது, அது தமிழருக்கும் நல்லதல்ல, பிறருக்கும் நல்லதல்ல" என்கிறார்.

சிங்களப்பேரினவாதிகளால் நீண்ட காலமாகவே உரிமைகள் பறிக்கப்பட்டு ஒடுக்கப்படும் தமிழ்மக்கள், தமது உரிமைகளை மீட்டெடுக்கப்போராடுகின்றனரே தவிர, சிங்களவரின் உரிமைகளைப் பறிக்கப் போராடவில்லை; ஆனால், தமிழர்கள் தமது உரிமைகளுக்காகவும் நலன்களுக்காகவும் போராடும்போது, "தமது நலன்கள் பறிபோகப்போவதாக" சிங்களப்பேரினவாதிகள் தவறாக ஓலமெழுப்புகின்றனர்.

2. "'ஆண்ட பரம்பரைக்'கதை கூறுகிற தேசியவாதத்தின் வறுமை" என்று சொல்லும் சிவசேகரம், அதன் பின்னணியைச் சரியாகப் பார்க்கவேண்டும். தம்ழிஅர்களின் 'பாரம்பரியத் தாயக'க்கோட்பாட்டை நிராகரிக்கும் பேரினவாதிகள் எப்போதுமே, தமிழர்களை "வந்தேறு குடிகளாகவும்", சொந்த அரசொன்றை ஒருபோதுமே இலங்கையில் கொண்டிராதவர்களாகவுமே சித்தரித்து வந்துள்ளனர். இச்சித்தரிப்பை இலங்கையின் பொதுவான வரலாறும், குறிப்பாக 'யாழ்ப்பாண இராச்சியம்' பற்றிய வரலாறும் பொய்ப்பிக்கின்றன. பேரினவாதத்தை எதிர்கொள்ளவே "ஆண்ட பரம்பரை" என்ற தொடர் சிலரால் கையாளப்பட்டது. தமிழர்கள் தம்மைத்தாமே ஆளவேண்டுமென்கின்றனரே தவிர, சிங்களவர்களையும் தாம் ஆள வேண்டுமென என்றுமே சொல்லவில்லை. 'ஆண்ட பரம்பரை' என்பதைச் 'சாதி மேலாண்மை உடையோர்' என்பதாகத் திரித்து, சிவசேகரமும் அவரைப் போன்ற இடதுசாரிகள் பலரும் முன்னர் கருத்துகளைப் பரப்பியமையையும் சுட்டுதல் இங்கு பொருத்தமானது.


=========================================

மாலனின் வலைப்பதிவர்பட்டறையின் பேச்சுக்கும் தொடர்ந்த கேள்வி-பதில்களையும் ஒலிக்கோவையாக இணையத்திலே இட்ட பத்ரிக்கு நன்றி. மேலும், அதிலே எனக்குத் தேவையான மாலன், -/பெயரிலி.+இராம்+மகள்+ஈழம்+ஸ்ரீலங்கா+இந்தியா பற்றிப் பேசிய துண்டத்தினைப் பிரித்தெடுத்து ஒலிக்கோப்பேற்ற கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தினைக் கைக்கொள்வதற்கும் நன்றி.

குறிப்பிட்ட ஒலித்துண்டம் இங்கே இணைத்திருக்கின்றேன்



முழுதாக மாலன் என்ன பேசியிருக்கின்றார் என்று இப்போது (இரைச்சலூகவேனும் ஓரளவுக்குத் ) தெரிகின்றபோதிலே, மாலனின் இப்பேச்சுமேலே ஈழம்_இந்தியா_ஸ்ரீலங்கா பற்றி விபரமாகப் பின்னால்.

இப்போதைக்கு, வெறுமனே நான் இராமின் மகள் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே படிப்பதைச் சொன்னதை, தன் வலைநெறி பிறந்து எழுதுவதற்கு உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டதைப் பற்றி. முதலாவது ஒரு வரி, நான் பெரியாரும், இராம் இராஜாஜியும் அல்ல; நான் டேவிட்டும் இராம் கோலியாத்தும் அல்ல; நான் ஈழத்திலே என் குடும்பத்தைக் கொண்ட தமிழ் அடையாளத்தோடிருப்பவனும், இராம் இலங்கா இரத்னா என்ற ஸ்ரீலங்கா அரசின் நன்னடத்தைப் பதக்கத்தைப் பெற்று ஸ்ரீலங்கா அரசுசார் "சமாதானக்"கூட்டங்களை இந்தியாவிலே நடத்திக்கொண்டிருக்கும் அரசியற்பலமும் பொருந்திய மாலனின் நண்பயுமாவார். குறைந்தபட்சம் ஒற்றுமையென்பதும் நானும் இராமும் நாற்பது வயதுதாண்டிய ஆண்கள் என்பதுமட்டுமே (இருவருக்கும் பேசுமொழி 'தமிழே' என்ற ஒற்றுமையைக் கொண்டு வராதீர்கள். குறைந்தபட்சம் இரண்டுபேர் ஒரே மொழியிலே ஆளையாள் புரிந்துகொள்ளும்போதுதான், ஒரே மொழி பேசுகின்றவர்கள் என்று நான் கருதுகிறேன். நீங்கள் அப்படியாகக் கருதாவிட்டால், நான் ஒன்றும் செய்யமுடியாது)

இனி, "செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் முதலாளித்துவ அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே பத்தி(ரிகை)த்துறையிலே மினுங்குவதாக வாசிக்கின்றோமே?" என்ற செல்வநாயகியின் பதிவின்பின்னான என் ஒரு வரி எப்படியாக, அதே பதிவுப்பின்னூட்டத்திலே மாலனினால், ""உதர்ரணமாக, புரட்சி எது, குறுங்குழு வாதம் எது என்று சுகுமாரனின் கருத்துக்களை முன்வைத்து நடக்கும் இந்த விவாதத்தில் ராமின் மகள் கொலம்பியா பல்கலையில் தன்படிப்பில் சிறந்தை, பெயரிலி எள்ள்ல் தொனியில் கிண்டலடிக்கிறார். அதற்கும் இந்த விவாதத்திற்கும் என்ன சம்பந்தம்?" என்று பெயர் சொல்லிப் பொருள் விரிக்கப்பட்டு, பின்னால், சென்னைப்பட்டறையிலே வலைநெறி பிறழ்ந்தற்கு உதாரணமாகப் போய் நிற்கின்றது.
(என் பின்னூட்டத்திலே குறிப்பிடாமலே பொதுவாகச் சொன்னது, "செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகள் என்று சொன்னதை இந்து இராம் என்று நேராகவே போட்டெழுதுவதிலேகூட எனக்கேதும் தடையிருந்திருக்காது. ஆனால், அவ்வரிகளிலே அந்நேரத்திலே தோன்றவில்லை. அதனால், அப்பத்திரிகையாளரை இந்து இராம் என்றே வாசித்துக்கொள்வதிலேதும் எனக்குத் தடையில்லை - மாலன்தான் 'அப்பத்திரிகையாளரை இந்து இராம் என்று முதலிலே அடையாளம் கண்டு குறிப்பாக அதே வலைப்பதிவின்பின்னூட்டத்திலே பெயர் சொல்லி எழுதினார், அதனாலேயே "சாதாரண மாலன் வாசகர்களுக்கு " நான் பேசுவது இந்து இராம் + மகள் பற்றி என்று புரிந்திருக்கலாம்' என்று சொல்லி ஒரு தார்மீகமற்ற, ஆனால் தர்க்களவிலே எனக்குப் பாதுகாப்பான கவசத்தின்கீழே நான் மறையலாம் என்றானாலுங்கூட, தார்மீகமற்றதும் கோழைத்தனமானதுமான வாதமாகவே அஃதமையும்)

நான் எழுதிய அந்த ஒரு வரி எங்கே எதற்காகப் பயன்பட்டிருக்கின்றதென்று புரிந்துகொள்ளாதவர் அல்லர் பத்திரிகையாளர் மாலன். ஜீன் அரசநாயகத்துக்கு "தேவசுந்தரி, பார்வதி என்ற இரு பெண்களின் தாய்." என்ற இரு வரிகள் எதற்காக ஜீன் அரசநாயகத்தின் நூல் பற்றிய "அடையாளங்களுக்கு அப்பால்.. " என்ற கட்டுரையிலே எதற்கு எழுதினாரோ, அதற்கும் மேலான ஒரு தேவையுடனேதான் இந்து இராமின் மகள் பற்றி நான் சொன்ன கருத்தின் தேவை அமைந்தது. நான் பேராதனையிலே படிக்கும் காலத்திலே, ("தஸ்புஸ்கிஸ்" மேல்மட்ட நுனிநாக்கு ஆங்கிலம் வாசமேயற்ற) எங்களையறியாத பார்வதியிலே பொழுதுபோக்காக ஒரு வயதுக்கோளாற்றுத்தூரத்துப்பார்வை வைத்திருந்த நண்பனோடு மதிய உணவுக்கு கலைப்பீட உணவகத்துக்குச் சாப்பிடப்போனதுபற்றியோ, அரசநாயகம் அவர்களிடம் அந்நேரத்திலே சரிநிகரோடு சம்பந்த 'மார்க்கா' பாலகிருஷ்ணனின் கட்டுக்கல பேராதனைவீதி அலுவலகத்திலே வேறு சில நண்பர்களோடு இரண்டு மாதங்கள் வாரம் மூன்றுமுறை மாலையிலே தடவைக்கு ஒன்றரை மணிநேரம் ஆங்கிலம் கற்றது பற்றியோ தனிப்பட்ட விபரங்களையெல்லாம் சேர்த்து எழுதினாலேதான், பேச்சுக்குச் சம்பந்தமில்லாத அநாவசியமாகியிருக்கும். ஆனால், நான் சொன்னது மிகவும் தெளிவான வாதம்.

நான் இந்து இராமின் மகளைப் பற்றி எதற்குச் சொன்னேன் என்று சென்ற இடுகையிலே விளக்குமாறு கொண்டு விளக்கிவிட்டேன். அதனால், சொன்னதை மீண்டும் "ஓர் ஒன்று ஒன்று; ஈர் ஒன்று இரண்டு" சொல்ல எவ்வகையிலும் எனக்குத் தெம்பில்லை; இதுவரை சொன்னதையே வாசித்துப் புரிந்துகொள்ளமறுக்கும் மாலனுக்கு அதற்காக நேரம் செலவு செய்யவும் விருப்பமில்லை. வேண்டுமானால், மீண்டும் வலைநெறி வளைநெறி பின்புலத்தையும் முதலாவது காரணத்தையும் வாசித்துப்பார்க்கவும். வேண்டுமானால், நான் எழுதியதினை மிகவும் பரந்துபட்ட, விரிந்த அதற்கு ஒத்தமை உதாரணமாக நான் சொல்லக்கூடியது கீழே வரும் நிகழ்வு.
சில வாரங்களுக்கு முன்னால் நடந்த அமெரிக்க ஜனநாயகக்கட்சியின் ஜனாதிபதிவேட்பாளர்களின் விவாதமேடையிலே "பிள்ளைகள் தனியார் பள்ளிக்கூடங்களிலே படிக்கின்றார்களா? பொதுப்பள்ளிக்கூடங்களிலே படிக்கின்றார்களா?" என்று விவாதமட்டுறுத்துனர் ஒவ்வொரு வேட்பாளரிடமும் கேட்டார். அவர்களுக்கும் ஆறுதலாகப் பதில் சொன்னார்கள். விவாதமட்டுறுத்துனர் என்ன நெறியோடு வேட்பாளர்களின் தேர்தலிலே சம்பந்தப்படாத பிள்ளைகளைப் பற்றிக் கேட்கிறார் என்று அவரிடம் எவருமே கேட்பதில்லை. அது வெறுமனே வேட்பாளரின் சொல்லுக்கும் செயலுக்குமான ஒத்துப்போகும் தன்மையைக் காணவே கேட்கின்றார் என்று புரிகின்றது.
அவ்விவாதத்தின் எமக்குத்தேவையான உரைப்படி இங்கே கீழே:
---- சிஎன்என் யூரியூப் விவாத உரை உட்செருகல் -------
QUESTION: Hey, I'm Mike Green from Lexington, South Carolina. And I was wanting to ask all the nominees whether they would send their kids to public school or private school.
(APPLAUSE)
COOPER: The question is public school or private school. We know, Senator Clinton, you sent your daughter to private school. Senator Edwards, Obama and Biden also send your kids to private school. Is that correct?
CLINTON: No.
COOPER: No?
CLINTON: No, it's not correct.
COOPER: OK.
(LAUGHTER)
(CROSSTALK)
EDWARDS: I've had four children, and all of them have gone to public school. I've got two kids...
(APPLAUSE)
... who are actually here with me in Charleston tonight, two kids, Emma Claire and Jack, just finished the third grade in public school in North Carolina, and Jack just finished the first grade in public school in North Carolina.
COOPER: Senator Clinton?
CLINTON: And Chelsea went to public schools, kindergarten through eighth grade, until we moved to Washington. And then I was advised, and it was, unfortunately, good advice, that if she were to go to a public school, the press would never leave her alone, because it's a public school. So I had to make a very difficult decision.
COOPER: Senator Obama?
CLINTON: But we were very pleased she was in public schools in Little Rock.
COOPER: Senator Obama?
OBAMA: My kids have gone to the University of Chicago Lab School, a private school, because I taught there, and it was five minutes from our house. So it was the best option for our kids. But the fact is that there are some terrific public schools in Chicago that they could be going to. The problem is, is that we don't have good schools, public schools, for all kids. A U.S. senator can get his kid into a terrific public school. That's not the question. The question is whether or not ordinary parents, who can't work the system, are able to get their kids into a decent school, and that's what I need to fight for and will fight for as president of the United States.
(APPLAUSE)
COOPER: I want to ask this question of everyone.
Senator Biden?
BIDEN: My kids did go to private schools, because right after I got elected, my wife and daughter were killed. I had two sons who survived. My sister was the head of the history department. She was helping me raise my children at Wilmington Friends School.
BIDEN: When it came time to go to high school when they had come through their difficulties — I'm a practicing Catholic — it was very important to me they go to a Catholic school, and they went to a Catholic school. My kids would not have gone to that school were it not for the fact that my wife and daughter were killed and my two children were under the care of my sister who drove them to school every morning.
COOPER: Congressman Kucinich?
KUCINICH: My daughter, Jackie, went to the Columbus public schools and got a great education. And I want to make sure that that commitment that sent her to public school is a commitment that will cause all American children to be able to go to great public schools.
(APPLAUSE)
COOPER: Senator Gravel?
GRAVEL: My children went to public school and private school, and I'm recommend that we need a little bit of competition in our system of education. Right now, we have 30% of our children do not graduate from high school. That is abominable, and that is the problem of both parties.
(APPLAUSE)
COOPER: Senator Dodd?
DODD: My daughter goes to the public school as a pre-school — kindergarten. But I want to come back to the No Child Left Behind.
DODD: Because I think remedying this — and I understand the applause here — accountability is very important. This is one country — we've got to have the best prepared generation of Americans that we've ever produced in our educational system. No other issue, in my view, is as important as this one here. And getting the No Child Left Behind law right is where we ought to focus our attention here so that we have resources coming back to our states. You measure growth in a child. You invest in failing schools. But I would not scrap it entirely. Accountability is very important in this country. We ought not to abandon that idea.
COOPER: Let's try to stay on the topic.
The next question comes from Pennsylvania.
QUESTION: Hi. My name is Anne, and I work at a Planned Parenthood in Pennsylvania. My question is, we here at Planned Parenthood support comprehensive sex education and I'd like to know if any of you as candidates have talked to your children about sex and used medically accurate and age-appropriate information?
COOPER: Senator Edwards?
EDWARDS: Well, Elizabeth and I have had sort of an unusual experience for parents, because Elizabeth likes to say that was made a member of AARP when she was pregnant with Jack, our last child.
EDWARDS: We have had four children. Our two youngest children are now nine and seven. So we have been through the whole experience, including kids who have grown up. Yes, the answer is we have taught our younger children when they were young how to look for the signs of wrong touching, any kind of what would be sexual abuse, inappropriate touchng. And we have taught our children as they got older, all — I think, using medically appropriate terms — all that they needed to know to be properly educated.
COOPER: Senator Obama, Mitt Romney has accused you this week of saying that 5-year-old children should be getting sex education. Was he right?
OBAMA: Ironically, this was actually a proposal that he himself said he supported when he was running for governor of Massachusetts.
OBAMA: Apparently, he forgot.
(LAUGHTER)
And it makes the exact point that John made. I've got a 9-year-old daughter and a 6-year-old daughter. And I want them to know if somebody is doing something wrong to them, encroaching on their privacy, that they should come talk to me or my wife. And we've had that conversation, but not every parent is going to have that conversation with their child, and I think it's important that every child does, to make sure that they're not subject to the sexual predators.
COOPER: All right.
---- முற்று------
மேலும், கனிமொழி குறித்து இலக்கியத்திலிருந்து அரசியலுக்கு...... என்ற நீண்ட பத்தியைச் சிங்கப்பூர்த்தமிழ்முரசுக்கு எழுதியவர், குடும்பங்களை அளை/ழையாமலா, அப்பத்தியினைப் பொதுவாசகர்களுக்குத் தந்திருக்கின்றீர்களென்று நினைக்கின்றீர்கள்? நான் குறிப்பிடாமலே பொதுவாகச் சொன்னது, "செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் கொலம்பியாவிலே மின்னுதல்' என்ற அர்த்தப்பட நான் எழுதியதை, முதலிலே தனிப்பட்டவரின் குடும்பம் மீதான ஏகடியம் என்று அதே பதிவுப்பின்னூட்டத்திலே பேசிவிட்டு, அதன் பின்னால், மூன்றிடங்களிலே நான் விளக்கியபின்னாலும், சென்னைப்பட்டறையிலே போய் சம்பந்தமில்லாததைப் பேசுதல் என்பதற்கு உதாரணம் எடுப்பதென்பது ஒன்று புரிந்துகொள்ளும் திறனில்லாததால் நிகழக்கூடியது; இரண்டாவது, மற்றவர்களின் கருத்தினை வாசிக்கவோ செவிமடுக்கவோ செய்யாமல், வெறுமனே தான் மற்றவர் என்ன சொன்னார் என்று நினைக்கின்றாரோ அவ்வர்த்தத்திலேயே மற்றவர் சொன்னார் என்று சொல்லும் திமிர்த்தனத்தின் (வார்த்தைக்கு மன்னிக்கவேண்டும்;அதுதான் உள்ளவற்றிலே நெறியானதும் பொருத்தமானதுமாகத் தெரிகின்றது) விளைவாகத் தோன்றக்கூடியது; மூன்றாவது, வேண்டுமென்றே ஒருவரைப் பற்றிய தவறான கருத்தினைக் குறிப்பிட்ட குழுவிடையே ஏற்படுத்தவேண்டுமெனச் சொல்லக்கூடியது (அது யார் "ஆமாம் சார்"" மாலனுக்குப் போட்டதென்று இன்னமும் தெரியவில்லை :-)). மாலன், நிச்சயமாகப் புரிந்துகொள்ளும் திறனற்றவர் அல்லர். அப்படியானால், எதற்குத் தொடர்ந்துமே வலைப்பட்டறைக்கூட்டமொன்றிலே வலைநெறிக்கு ஒவ்வாதது என்பதற்கான விளக்கமாக என் கூற்றினை எடுத்துச் சொல்லி, மேலும் பேசிக்க்கொண்டிருக்கும் நெறிபிறழ்வுக்கருத்துக்குச் சம்பந்தமில்லாத விளக்கமாக/வில்லங்கமாக, இராமின் மகள் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே படிப்பதை நியாயப்படுத்தும்விதமாக, ஈழத்தமிழர் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட் வைத்திருப்பதுவரைக்கும் இரண்டரை நிமிடங்களை எடுத்துக்கொண்டு, கடைசியிலே மட்டுறுத்துனருக்கு மற்றவர்கள் அவரிடம் கேள்வி கேட்க வழங்க நேரத்தினைத் தராமற் போகின்றாரென்று புரியவில்லை.

இதற்குமேலும் புரிந்துகொள்ளமுடியாவிட்டால், இக்குறிப்பிட்ட ஒரு வரி தொடர்பான (விதண்டா)வாதத்திலே எனக்குச் சொல்ல ஏதுமில்லை. இந்துவிலே வெளியான கொலம்பியா பல்கலைக்கழகத்திலே சிறந்து விளங்கும் மாணவி பற்றிய செய்தியின் அடிப்படையிலே வாதத்துக்குச் சுட்டிய என்னை வலைநெறிபிறழ்ந்ததாகக் கண்டிக்கும் நீங்கள், பிரபாகரனின் மகன் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டுடன் போகின்றார் என்று "அறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி" உலகமே நம்பும் India's national daily இந்து இட்ட பத்திரிகைச்செய்தியையும் பத்திரிகைநெறிப்படி தவறு என்று பத்திரிகை நெறியிலே மேற்படிப்பும் பட்டறிவும் பெற்று வலைப்பட்டறைகளிலே வலைநெறி பற்றி (ஆளில்லாதபோது, உதார் ரணம் காட்டும்) பத்திரிகையாளர் நீங்கள் அச்செய்தி வெளியான நேரத்திலேயே கண்டித்திருப்பீர்களென்று இவ்விடுகையை வாசிக்கும் எல்லா வாசகர்களையும்போல நானும் நிச்சயமாக நம்புகிறேன். இத்தோடு, அடுத்துவரும் மாலடியார் அஞ்ஞானக்கும்பி மறுப்பு 1ஆ பகுதியிலே என் கூற்று நான்குக்கு இங்கே சொன்னதையும் முழுமைக்காகச் சேர்த்துக்கொள்வதைத் தவிர, வேறெங்கும் *தனிப்படத் தொட்டதன்* அளவிலே உங்கள் வலைப்பட்டறைப்பேச்சினைப் பற்றி நான் ஏதும் சொல்லப்போவதில்லை. மேலும் பேசுவது வெறும் சோர்வைத்தான் தருகின்றது. மாலனைப் போன்றும் புரிந்தும் புரியாததுபோலவே பேசிக்கொண்டு போகின்றவர்களுக்குத் தனிப்பட விளக்கம் கொடுக்கும் இந்நேரத்துக்கு யாரேனும் புத்தாலோ புல்வீனோ நளினத்திலே ஒரு சிறுகதையெழுத முயற்சித்திருந்தாலுங்கூட, என் சட்டைப்பதக்கம்போல, நானே குத்திக்கொண்டிருந்திருக்கலாம் :-(

====================================================

சிந்தாநதி, வெற்றி:
மிகவும் அன்புடன் என் முன்னைய பதிவின் பின்னூட்டங்களிலே சொல்லியிருக்கும் நண்பர்கள் நீங்கள். பொதுவிலேயே பல விடயங்களிலே உடன்பாடு கொண்டுள்ளவர்கள் நாம் (வெற்றியின் ஆறுமுகநாவலர் இடுகைக்கருத்தினைக் குறித்துப் பிறகொரு முறை சண்டை போட்டுக்கொள்ளலாம் :-)). அதனால், நான் நீங்கள் சொன்னதிலேயிருக்கும் கருத்துகளோடு உங்களுடன் நான் முரண்பட்டால் புரிந்துகொள்வீர்களென்று நிச்சயமாக நம்புகிறேன். ஏற்கனவே சொன்னதை விரிவாக, எழுதத் தெம்போ விருப்பமோ இல்லை.

வேண்டுமானால், சில கேள்விகளை மட்டும் இப்போதைக்குக் கேட்கிறேன்; பொதுவாக, இப்போதெல்லாம் எதைப் பற்றி நான் *தனிப்பட்ட என் கருத்தை என் பதிவிலே* பேசினாலுங்கூட, வேண்டுமென்றே ஈழத்தவரின் கருத்தென விரிப்பதுவும் தமிழ்மணம்/பூங்காவினைக் குறிவைத்துத் தாக்கி அடக்கமுயல்வதும் நிகழ்கின்றதைக் கண்டிருப்பீர்கள். ஈழத்தவருக்கு விரிப்பதைப் பற்றிக்கூட எனக்குப் பெரிய கவலையில்லை. ஈழம் என்பது எவராலும் இன்னமுறைப்படி இருப்பவர் இன்னார் என்று, பதிவு செய்யப்பட்ட ஓர் அமைப்பல்ல (வலைப்பதிவர்களின் நாடுகளில் ஒன்று என்று பதிவாளர்கள்கூட்டமைப்பொன்று பதிவு செய்ததைச் சொல்லவில்லை :-)); அதனாலே, எதையும் சேதப்படுத்தாது. ஆனால், தமிழ்மணம்/பூங்கா/டிஎம்ஐ என்பவற்றிலே வைக்கும் தாக்குதல்கள் அப்படியானவை அல்ல; அதனாலேயே நான் கருத்தளவிலே என் *சொந்தக்*கருத்தினை. *என் தனிப்பட்ட ப்ளொக்ஸ்பொட்" பதிவிலே சொல்லத் தயங்கத்தேவையில்லையென்றபோதிலுங்கூட, நடைமுறையிலே என்னையும் தமிழ்மணம்/பூங்கா/டிஎம்ஐ என்பவற்றினையும் சேர்த்து எழுதி வாசிப்பவர்களுக்கு என் கருத்து இவ்வமைப்பின் கருத்து என்பதாக மயக்கம் ஏற்படுத்தி அவற்றுக்கெதிராகச் செயற்படத்தூண்டும் சிலரின் அடாவடித்தனம் என்ற மறைமுகமான தாக்குதலுக்கு - வெட்கமின்றி வெளிப்படையாகச் சொன்னால் - ஓரளவுக்கு -இவற்றின் நன்நோக்கங்கள் நிலைத்து இலக்குகள் எய்யப்படவேண்டுமென்பதற்காக-அஞ்சுகிறேன். இத்தனைக்கும் இந்துவைப் போல அதன் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்தும் பத்திரிகையின் உத்தியோக பூர்வமான கருத்தும் ஒன்றே என்பதுபோல எங்குமே பூங்காவோ/தமிழ்மணமோ/டி எம்ஐஓ அதனோடு சம்பந்தப்பட்டவர்களின் பதிவுகளையும் தமதென்று சொல்வதில்லை. இல்லை, தமிழ்மணம்/பூங்கா/டிஎம்ஐ இவற்றைத் தாக்கியே என்னைப் பயமுறுத்துவீர்களென்றால் (சிந்தம் சிதறிய சட்னிவடைக்கு அல்ல இந்த அறிவிப்பு; அதனால், தொடர்ந்து நீர் பதிவும் நானே, பின்னூட்டமும் நானே என்று விளையாடலாம் :-)), சில மாத அவகாசம் தாருங்கள். என் சொந்தக்கருத்தினை, என் சொந்தப்பதிவிலே சொல்ல நான் டிஎம்ஐ இலிருந்து விலகிக்கொள்ளவேண்டுமா என்று தீர்மானித்து முடிவெடுத்துக்கொள்ள அவகாசமுடனான வாய்ப்பாகவிருக்கும். I do not have to endure some people's nonsenses and slurs personally towards me only because I do some voluntary tasks for TMI. My ego is important to me more than anything I see, encounter and mix in the net. (இலங்கைத்தமிழ்தான் புரியாது; இதுவேனும் -நான் எழுதியிருக்கும் english grammer ரைட்டா? :-(- புரிந்தால் சரி) இதனைப் புரிந்துகொண்டு, மேலே நீங்களும் வாசிக்கின்றவர்கள் எல்லோரும் என் கேள்விகளை வாசிப்பீர்களென்று நம்புகிறேன்.


வலைப்பதிவர்பட்டறையிலே அக்கணத்திலே சொல்லப்பட்டதையோ தடுக்கமுடியாத மட்டுறுத்துனர் மற்றவர்கள் குறித்தோ எனக்கேதும் வருத்தமில்லையென்றே நீங்கள் கொள்ளலாம். நான் வருத்தப்படுவேனா என்பது பற்றி வலைப்பட்டறை அமைப்பாளர்கள் மெய்யாகவே கவலைப்படுகின்றவர் அல்லர் என்றுதான் எனது எதிர்பார்ப்பு. இதற்கான காரணங்களை வலைப்பதிவு அமைப்பாளர்களிலே சிலருக்கும் எனக்குமிடையே வலைப்பதிவிலே ஏதோ ஒரு புள்ளியிலே தொட்டுக்கொண்டு விட்டுக்கொண்ட சந்தர்ப்பங்களை நான் சுட்டிக்காட்டலாம். வலைப்பதிவு ஆட்களையும் அரசியலையும் கையாளும் திறன் கொண்ட அதிமேற்றிராணிகளும் சந்திரசுவாமிணிகளும் கணித்திரைமறைவிலே செயற்படும்வரை அப்படியான வருத்தங்கள் மெய்யாகவே அவர்களிடம் தோன்ற வாய்ப்பில்லை என்றே நிச்சயமாக நான் நம்புகிறேன். அப்படியல்ல என்று அவர்கள் சொல்லவேண்டிய அவசியமுமில்லை; எவரது நம்பிக்கையும் தவறு என்று இன்னொருவர் நிறுவுவதும் கடினம். ஆனால், அதுவல்ல இங்கேயுள்ள பிரச்சனை. வேண்டுமென்றே மட்டுறுத்தும் நிலையிலிருந்த சிவக்குமார் மாலனைப் பேசச்சொல்லியிருப்பார் என்றோ அல்லது அப்பட்டறைக்கூடத்திலேயில்லாத (இன்னமும் சென்னையிலேயே இல்லாத நீங்கள் உட்பட) மற்றைய பட்டறை அமைப்பாளர்களும் வேண்டுமென்றே இதைச் செய்ததாகவோ கேள்வி எழுப்பமுடியாது. அப்படியான கேள்வி எழும்பினால், அது கேட்பவரின் தன் தேவைக்காகத் திரிக்கின்ற போக்கினைத்தான் காட்டும். தவிர, தனிப்பட்ட அளவிலே, என்னை மாலன் அங்கே இப்படியாகக் குத்தினாரென்றால், அதற்கு எங்கே அவருக்குக் குத்தும்படி குத்தவேண்டுமென்று எனக்குத் தெரியும். அப்படியாகத்தான் இணையத்திலே என் செயற்பாடுகள் இதுவரையிருக்கின்றன. அதனால், எதிராளியின் அதே சண்டித்தனத்தோடு கோதாவிலே இறங்கும் என்னைப் பற்றியதல்ல எவ்வகையிலும் இப்பிரச்சனை. என் "பெண்களைத் தமிழ்மணத்திலிருந்து பெண்கள் வாரத்திலே துரத்தி அவர்களின் சேவைகளையெல்லாம் எனதென்று காட்டிக்கொள்ளும் ஆணாதிக்கத்தன்மை பொருந்திய, விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் அதேநேரத்திலே திராவிடத்தமிழர்களையும் அய்யங்கார்களையும் ஒரே நேரத்திலே எதிர்க்கும், புரியாமலே இலங்கைதமிழ் எழுதும், எழுத்தாளர் சல்மாவுக்கும் சல்மா அயூப்புக்கும் வித்தியாசம் தெரியாத" வானவிற்பண்புகளைத் தாமாக உணர்ந்தவர்களோ இடைத்தரகிகள் ஊடாகப் பாடங்கேட்டவர்களோ பாதிப்பேர், என்னையே அறியாத புதுப்பதிவர்களாக ஆகக்கூடியவர்கள் மீதிப்பேர் கொண்ட நான் போயேயிருக்காத சென்னையிலே மாலன் போகிறபோக்கிலே வைக்கும் மூன்றரை நிமிட நுண்ணரசியல் எவ்விதத்திலும் என்னைத் தனியாளாகப் பாதிக்கப்போவதில்லை. அதனால், இங்கே வாதம் என்னைப் பற்றியதல்ல; ஆனால், பட்டறையினர் -குறிப்பாக, மா. சிவக்குமார் - அதற்குப் பின்னாலே, இந்தக் குறிப்பிட்ட ஒரு விடயத்தை எப்படியாகக் கையாண்டார்கள் என்பதுதான் *எனது தனிப்பட்ட, வலைநெறிப்பட்ட பார்வையிலான* கேள்வி.

இதையும் நான் மிகவும் தெளிவாக என் முன்னைய பதிவிலும் பின்னூட்டங்களிலும் பிரித்துக்காட்டிய, வலைப்பதிவுப்பட்டறை குறித்த என் மதிப்பினையும் அதன் அமைப்பாளர்களின் உழைப்பு குறித்த என் மதிப்பினையும் தனித்தனியே பிரித்துப் புரிந்துகொள்ளவேண்டுமென மீண்டும் இங்கே அன்புடன் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், மாலன் பற்றிக் கேட்பதையெல்லாம், வலைப்பட்டறைக்கு எதிரானது போலவே திரும்பத்திரும்பப் பேசும் வகையிலே ஓரிருவர் கிளம்பியிருக்கின்றரோ என்று தோன்றுகின்றது. அப்படியல்ல; வலைப்பதிவர்பட்டறைகள் அவற்றின் உடனடி விளைவுகள் எவையாக ஆரம்பத்திலேயிருந்தாலுங்கூட, தொடர்ந்தும் சென்னை வலைப்பதிவுப்பட்டறை அமைப்பாளர்களின் நோக்கினதும் உழைப்பினதும் பாதையிலே விரிந்தெங்கும் நடக்க, பேரளவு வலைப்பதிவர்கள்போலவே பார்வையாளனாக நானும் மிகவும் ஆவல்கொண்டிருக்கின்றேன்; அப்பட்டறை அமைப்பாளர்களின் நற்செயற்பாடுகளுக்குக் வலைப்பதிவுப்பார்வையாளனாக கடப்பாடும் கொண்டிருக்கின்றேன்" இதைப் புரிந்துகொண்டு மேலே வாசிக்க வேண்டிக்கொள்கிறேன்.

என் கேள்விகள் சில:

1. மாலனின் இடத்திலே நானும் என்னிடத்திலே மாலனுமிருந்திருந்தால், மா. சிவக்குமாரோ மற்றைய அன்றைய நாள் அங்கேயிருந்த வலைப்பதிவு அமைப்பாளர்களோ என்ன செய்திருப்பார்கள்? கேள்வி கேட்கும் விவாதங்களிலே புல் முளைக்கின்ற விளைவுமில்லாதபோது, எதற்காகப் பட்டறையிலே "கேள்வி நேரம்" என்ற என் சிறுபிள்ளைத்தனமான வாதத்தை இங்கே விட்டுவிடுகிறேன். "ஆமாம் சார்" என்று மாலன் சொல்வதற்குத் தலையாட்டுகின்றவர் கேட்கும் மாலனின் பேச்சின் போதான ஒலிப்பதிவிலே, பட்டறை முடிந்தபின்னால், அமைப்பாளர்களோ மா. சிவக்குமாரோ மாலனிடம் இதைப் பற்றிச் சுட்டிக் காட்டினார்களா என்பது கேட்காதென்ற நிதர்சனநிலையையும் ஒத்துக்கொள்கிறேன்.

2. மாலனின் பேச்சினைக் குறித்து மோகன்தாஸ் கேள்வி எழுப்பாவிட்டால், அதன் பின்னால், அதைக் குறித்து ஓரிரு இடுகைகள் வந்திராவிட்டால், மாலன் விவாதத்துக்குரியதாகப் பேசியது "தணிக்கை செய்யப்பட்டே" வந்ததுபோலவே எல்லாம் முடிந்திருக்குமா? மற்றைய வலைப்பட்டறை அமைப்பாளர்கள் இதற்காக ஓர் இடுகை எழுதியிருப்பார்களா?

3. திருவின் பத்திரிகையாளர் மாலனுக்கு... பதிவுக்கு ஈழத்தவனாக நானும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்; அதே நேரத்திலே, தனிப்பட்ட ஆளாக ஒரு கேள்வி, அங்கே வந்திருக்கும் பின்னூட்டத்தின்பின்னான பின்னூட்டம் இது,

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
//இதோ தாய் தமிழகத்தில் இருந்து முழங்குகிறோம்

"ஈழத்தமிழர் சிந்தும் ரத்தம் எங்கள் ரத்தம் "

எங்கள் தொப்புள் கொடி உறவுகளின் துயர் கண்டு கலங்கக்கூட உரிமையில்லையா ?
//

ரிப்பிட்டேய்..
8/09/2007 02:17:00 PM


யெஸ். பாலபாரதி வலைப்பதிவு பட்டறையின் 'தல'யான ஓர் அமைப்பாளர்; இங்கே ரிப்பிட்டேய் என்று குரல் தருவதை ஈழத்தவனாக நன்றியுடன் ஏற்றுக்கொள்கையிலே, பட்டறை முடிந்தபின்னால், மாலனிடம் அவரின் ஈழத்தவரும் ஸ்ரீலங்கா பாஸ்போர்டும் என்பது நெறிக்கு அப்பாலான பேச்சாக அலைந்தது பற்றிய கருத்துப்பற்றி ஏதேனும் ஒரு வார்த்தை (ஆட்சேபமென்று அல்ல்) கேட்டாரா என்று தெரிந்து கொள்ள ஆவல்; நிச்சயமாக, -/பெயரிலி.யின் பெயர் சொன்னதைப் பற்றித் தனிப்பட்ட அக்கறைப்படவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. கடந்த ஐந்து மாதங்களிலே நிகழ்ந்தவற்றினை உணர்ந்திருக்குமளவிலே அப்படி அவர் கேட்டிருந்தால்மட்டுமே எனக்கு சில நிகழ்வுகளைத் திரும்பி மீள்பாவை பார்க்கும் தேவையை வைத்திருந்திருக்கும்.


4. புதியவலைப்பதிவர்கள் (ஆகப் போகின்றவர்கள்) என்ன நினைப்பார்களோ, வலையிலே இதைத்தான் முதலிலே வாசித்துவிடப்போகின்றார்களோ என்று கவலைப்படுகின்றீர்கள்; மாலன் பேசியதை வைத்து, அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பது பற்றி எனக்கே கவலையில்லாதபோது (முதலாவது, இதையெல்லாம் அவர்கள் கவனித்தார்களா என்பது பெரியதொரு விடயம்; நாங்கள் அதைக் கவனிக்கவில்லை; கவனித்தார்கள் என்றே கொண்டு பேசுகின்றோம் :-)), நீங்களும் என் "பெயரை"ப் பற்றிக் கவலைப்படத்தேவையில்லை. ஆனால், வலைநெறி என்பது தவறான கருத்தினை ஒருவர் பரப்பியபின்னால், வலைப்பட்டறை அமைப்பாளர்கள் (எதிர்ப்பென்று அதற்கு ஏற்படாவிடத்து, அதைப் பெரிதுபடுத்தாததுகூடப் பெரியவிடயமில்லை; ஆனால்,) எதிர்க்கருத்தென்று ஒன்று வலையிலே எழுப்பப்படும்போது, அதைப் பேசாதிருத்தலே வலைநெறி என்று கற்றுக்கொள்வதுதான் இதனால் ஆகுமென்பதிலே உங்களுக்குச் சம்மதமென்றால், சொல்ல ஏதுமில்லை.

5. சிவக்குமார், பூர்ணாவின் இடுகையிலே

நான் மோகன்தாசுக்குச் சொன்னது
“அத்தகைய விவாதங்களால் புல் முளைக்கக் கூடப் பலன் இருக்காது என்பது என் கருத்து.”
இத்தகைய விவாதங்களை இந்தப் பட்டறையில் நடத்துவதால் எந்தப் பலனும் இல்லை என்ற பொருளில்தான். அதில் எனது சொற்பயன்பாடு அடாவடியாக தவறாகப் பொருள் படும்படி இருந்து விட்டதை உணர்ந்து வருந்துகிறேன்.


இங்கே சொல்லப்பட்டிருக்கும் விதத்திலே அவரின் வரிகளோடு எனக்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால், மாலனிடம் அவர் இதைப் பற்றி ஏதாவது சொன்னாரா? பதிவர் பட்டறைவின் நிகழ்வுகளென்று அவர் "தணிக்கை" செய்து எழுதிவைப்பதுதான் சரியான முன் மாதிரியா? சிவக்குமார் மன்னிக்கவேண்டும்; ஏனென்றால், அவர் எப்போதுமே எவரிடத்திலுமே அவரைப் பற்றிய தவறான கருத்து ஏற்படாதிருக்க மிகுந்த கவனத்தோடு செயற்படுகின்றவர் என்பதே தமிழ்நெற் காலத்திலிருந்து எனது புரிதல் (அரவிந்தன் நீலகண்டனுடனான விவாதம் போன விதங்கூட அதை உறுதிப்படுத்தியது); இப்படியாக, isolationists ஆக இல்லாமலே Mixing with crowd ஆக இருக்கும் நேரத்திலேயே தங்களைப் பற்றிய நல்ல கருத்தினை எல்லோரிடத்திலும் தக்கித்துவைத்துக்கொள்கின்ற வலைப்பதிவிலிருக்கும் சிலரிலே எனக்கு உள்ளூர மிகப்பொறாமையுண்டு என்பதையும் நான் சொல்லிவிடவேண்டும். [அட, நம் சித்தஞ்சிதறிச்சட்னிவடை என்னையும் இன்னும் சிலரையும் அன்போடு அ தட்டியெழுதிய பின்னூட்டத்தைக்கூட, சட்னிவடை கோச்சுக்கக்கூடாதென்று கொஞ்ச நேரம் நேற்றிரவு தன் பின்னூட்டம் மட்டுறுத்தப்படும் இடுகையின்பின்னாலே, 'me'தக்கவிட்டிருந்தாரென்றால் பாருங்கள் :-)]


6. இந்து இராம்_அவர் மகள் பற்றி நான் & மாலன் எழுதிய குறிப்புகளையும் விளக்கங்களையும் இடுகைகளையும் பின்னூட்டங்களையும் வாசித்தவர்களோ (புரிந்துகொண்டவர்களோ) - மோகன்தாஸ் பொதுவிலே வேறுகோணத்திலே தொட்டுக் கேள்வியெழுப்பியிருந்தாலுங்கூட - அப்பட்டறைக்கூ(ட்)டத்திலே இருக்கவில்லையா? இதுதான் தனிப்பட எனக்குப் பெரிய தாக்கமாகின்றது :-( மாய்ந்துமாய்ந்து மாலனின் தாமே பொலபொலக்கும் வாதங்களைப் பிய்த்துவைத்துக்கொண்டிருக்கின்றேன் என்று எண்ணிக்கொண்டு அரைமைல் நீள இடுகைகளை நேரம், சத்தி (இன்னும் வெளியே சொல்லமுடியாத, தேவையற்ற சில) விட்டு பதிவிலே இட்டுக்கொண்டிருக்கின்றேன். நீங்கள் அத்தனை பதிவர்களும் வாசிக்கின்றீர்கள் என்ற நம்பிக்கையிலே... அங்கே போய் மாலன் ராம் பொண்ணை அநாவசியத்துக்கு -/பெயரிலி. இழுக்கின்றார் என்று வலைநெறி புகட்ட, "ஆமாம் சார்", 'மௌனமே சம்மதம் சாமி' என்று இருந்தால், மாலடியார் அஞ்ஞானக்கும்மி மறுப்பு எழுதுவதைவிட்டுவிட்டு, அய்யனார், தமிழ்நதி வழியிலேயே "கதை, கவிதை" என்றோ அல்லது சிவபாலன், குமரன், வடுவூர் குமார் வழியிலே, "மினியாபொலிஸ் பாலம் உடைந்ததின் பின்னான தொழில்நுட்ப & நிர்வாகக்கோளாறு" & "கத்தரினா புயலிலே அணைக்கட்டு உடைந்த மண்மர்மம்" என்றோ, டிசே, சன்னாசி வழியிலே "அண்டார்ட்டிக்கா திரைப்படவிழாவிலே பார்த்த ஆபிரிக்கத்திரைப்படம் திருடிய ஆர்ஜெண்டீனியச்சிறுகதை" என்றோ எனக்கேனும் என்ன பேசுகின்றேனென ஓரளவு தெரிந்தார்தீவிலே இறங்கித் துன்புறுத்துவேன். அந்த வேதனை வலப்பதிவுக்கு வேண்டுமா? :-) (இதையாவது நீங்கள் புரிந்து வாசிக்கும்படி புரிந்து எழுதுகின்றேனா?) :-( அல்லது மாலன் போன்ற வலைப்பதிவைக் கண்டெடுத்து வழி நடத்திய முன்னோடிகளிலே அடங்காத சாதா ரண சகபதிவர் என்றுகூட பதிவுகளிலே ஓரிருவர் துளைக்கும்வரை தோன்றாத உங்களுக்கும் உங்கள்
பட்டறைக்கு ஊடகவிளம்பரம் கிடைக்கச்செய்யும் மாலன் சாருக்கும் (லக்கி லுக், நெஜமாலுமே ஜெ உண்மை மாலன் சாரை பேட்டி கண்டாங்களா? மாலன் சார் பட்டறையிலே தான் என்ன சொன்னார் என்று பட்டறையிலே மாலன் பேசியபோது இல்லாத நீங்கள் ஏதாவது அறிந்துகொண்டீர்களா? :-)) தொல்லையில்லாமல் வலைப்பதிவை விட்டுப்போய்விடட்டுமா? அது வலைநெறிக்குள்ளே ஓக்கேயாகுமா?


வலைநெறி பேசிய மாலனிடம் யாரேனும் "சார், சல்மா அயூப், போலி டோண்டு, இரவுக்கழுகார் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? வலைப்பதிவு நெறியிலே இதன் விளைவைவிடவா, இராம் பொண்ணு பேரை நீங்களேதான் உடைத்துச் சொன்னது பெரிதாகிவிட்டது?" என்று ஏன் கேட்கவில்லை என்ற கேள்வியும் என்னிடமிருந்தாலுங்கூட, அதை unconference வலைப்பட்டறை அமைப்பாளர்களிடம் நான் கேட்பது கேட்பது முற்றிலும் பொருந்தாது என்பதாலும், அந்நேரம் வலைப்பட்டறையிலே அமர்ந்திருந்து கேட்டிருக்கக்கூடிய பங்காளிகள் யார் என்று தெரியாததாலும் இங்கே நான் ஏழாவது கேள்வியாக எழுப்பவில்லை


ஆனால், இங்கே இக்கேள்விகளைக் கேட்கவேண்டுமென்று தோன்றியது. கேட்டுவிட்டேன். பதிலினை எவரிடமும் நான் எதிர்பார்க்கவில்லை. இதற்காக எக்காரணம் கொண்டும் தம் நேரத்தினைச் செலவு செய்து பெரிய இடுகைகளை, பட்டறை தன்னார்வத்தோடும் நன்னோக்கோடும் நடத்திய "குற்றத்"துக்காகத் தரவேண்டாமென்றே தாழ்மையுடனும் மெய்யான அன்புடனும் கேட்டுக்கொள்கிறேன்.......

........... ஆனால், ஒரேயொரு கேள்விக்கு மட்டும், ஆம், இல்லை என்று வலைப்பட்டறை அமைப்பாளர்கள் பதில் தந்தால் நன்றியுடையவனாவேன்...

"இத்தனைக்கும் பின்னால், மாலனிடம் நேரடியாக மின்னஞ்சலிலோ தொலைபேசியிலோ அவர் பதிவிலோ அவரின் பேச்சின் இப்பகுதியைக் குறித்து கண்டனவரி ஒன்றையேனும் எந்த அமைப்பாளரானாலும் இதுவரை தெரிவித்திருக்கின்றீர்களா?"


இவையெல்லாம் நான் மண்துகளை வைத்து மலையாகக் காட்டும் ஒரு குரூரக்கோணங்கிநிகழ்வு காட்டுவதாகத் தோன்றுமென்ற அச்சத்திலேயே அடக்கி வாசிக்கவேண்டியிருக்கின்றது. ஆனால், எனது கருத்து என் தனிப்பட்ட, மாலனின் -/பெயரிலி. என்ற பெயர் பயன்பட்டதன் பின்னான, கேட்க வேண்டுமென்று தோன்றாத, ஆனால், வெற்றி, சிந்தாநதி ஆகியோரின் பின்னூட்டங்களினாலே வெளிப்படையாகக் கேட்டாக வேண்டிப்போன கேள்விகள் மட்டுமே. ஈழம் குறித்த மாலனின் கருத்தினை (ப் புலம்பெயர்ந்த) ஈழப்பதிவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் பார்த்துக்கொள்ளட்டும். புலம் பெயர்ந்த ஈழப்பதிவர்களிலே நானும் அடக்கம் :-))

கடைசியாக, திரு அற்புதனின் வலையிடுகையிலே சுட்டிக்காட்டிய ஒரு வரியோடு இவ்விடுகையை முடிக்கிறேன் (வரிகள் அப்படியே ஞாபகமில்லாததால், கருத்து அப்படியே வரும்படி மட்டுமே தந்திருக்கின்றேன்): "இலங்கைத்தமிழர்களுக்கும் இந்தியத்தமிழர்களுக்கும் இடையே பிரித்தாளும் "அரசியல்" இனை நடத்துகின்றதைப் புரிந்து" கொண்டு நாம் செயற்படவேண்டும். இவ்விடுகையை வாசித்தவர்களிடமும் இவ்விடுகையை அப்படியான பார்வையோடு மட்டுமே பார்க்கும்படி கேட்டிருந்தேன்; கேட்கிறேன். இது சென்னை வலைப்பதிவர் பட்டறை மீதானதோ, அதன் அமைப்பாளர்களின் உழைப்பின் மீதானதோ விமர்சனம் அல்ல; அப்பட்டறையிலே மாலனின் கருத்துவெளிப்பாட்டோடு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்த விமர்சனம் மட்டுமே.

இவ்விடுகைக்கான ஆனந்தக்கும்மிகள் இடுகையின் நோக்கத்தினைத் திசைதிருப்ப மற்றோருக்கு வசதிப்பட்டுவிடுமென்பதாலே, அனுமதிக்கப்படமாட்டா; கும்பியிலே அடிக்கிறகும்மிகள் வலைநெறியோடிருப்பின் வருக வருகவென்று வரவேற்கப்படுகின்றன.

"எல்லோரும் in புற்றிருப்பதன்றி வேறேதும் yam அறியோம் பராபரமே!!"

Wednesday, August 08, 2007

வலைநெறி வளைநெரி

வலைநெறி வளைநெரி
படம் நன்றி: The Hunger Project

"தமிழ் தேசியவாதம் தமிழர் நலனைப் பிறரது நலன்களை விடவும் முக்கியமானதாகக் கொள்கின்றபோது, அது தமிழருக்கும் நல்லதல்ல, பிறருக்கும் நல்லதல்ல. ஈழத்தமிழன் என்ற சுய அடையாளத்தை நான் மறுக்கமுயல்வது அபத்தம். ஆயினும், அந்தச் சுய அடையாளத்தைப் பேண எனக்குள்ள உரிமை, தனது சுய அடையாளத்தைப் பேண, வேறு எவருக்கும் இருக்கவேண்டாமா? இங்கேதான் 'ஆண்ட பரம்பரைக்'கதை கூறுகிற தேசியவாதத்தின் வறுமை ஒரு மார்க்ஸியவாதியின் மொழிப்பற்றின் முன்னும் இனப்பற்றின் முன்னும் தெளிவாகிறது. தமிழர் ஒடுக்கப்பட்டால் அதற்கெதிராகக் குரல் கொடுப்பதோ போராடுவதோ, தமிழர் மேம்பட்டோர் என்பதனாலே அல்ல, எல்லோரும் சமமென்பதாலேதான். வியற்னாம் விடுதலைப்போரின் தேசியத்தன்மைகூடச் சமத்துவ அடிப்படையிலானதே ஒழிய, இன மேம்பாடு கோரும் முறையிலானதல்ல" - சி. சிவசேகரம் நேர்காணல், காலச்சுவடு இதழ் 15 (1996)

மேலேயும் வாசிக்க எண்ணமும் பொறுமையும் கொண்டவர்கள் வாசித்துக்கொள்ளவேண்டிய எனது மறுதலிப்புக்கூற்றுகள்

1. இவ்விடுகை தனி(ப்)பட்ட -/பெயரிலி. என்ற எனது கருத்துகளின் தொகுப்பு மட்டுமே; என் மொழி, நாடு, அமைப்பு, கதிரைக்கால், குதிரைவண்டி சார்ந்த வேறெவருக்காகவும் பிரதிநிதியாகச் சொல்லப்படுவதல்ல; அதனால், ஈழம்.எதிர்.இந்தியா, ஈழத்தமிழர்.எதிர்.தமிழகத்தமிழர்.எதிர்.புலம்பெயர்தமிழர், பார்ப்பான்.எதிர்.திராவிடன் புரிதல்களெல்லாம் அநாவசியமாக நான் சொல்வதைத் திசைதிருப்புவதாக அமையுமென்று நம்புகிறேன். அவ்வழி புக்கி, முக்கி வரும் 'அகதி, 'பார்ப்பான்' வகைப்பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டா

2. அண்மையிலே நடந்த சென்னை வலைப்பதிவர்பட்டறையிலே மாலன் பேசிய வலைநெறி, அதனுடன் சம்பந்தப்பட்டு வலைப்பட்டறை நெறிப்படுத்துனர் மா. சிவக்குமார் (மற்றும் வலைப்பட்டறை அமைப்பாளர்கள்) நடத்துமுறை, வெளியிட்ட கருத்து ஆகியற்றினை மட்டுமே மையப்படுத்தி வரும் இடுகை இது. ஆனால், இஃது எவ்விதத்திலும் வலைப்பதிவர்பட்டறையினைக் குறித்த விமர்சனமாகக் கருதப்படக்கூடாது; அவ்வாறு விவாததைத் திசை திருப்பும் வகையிலே திரிக்கப்படவும் கூடாது. வலைப்பதிவர் பட்டறை குறித்த மிகுதி செயற்பாடுகளிலே எனக்குக் கருத்தினைத் தெரிவிக்க எதுவிதமான விழைவோ தேவையோ அறிதலோ, அதைக் கேட்க மற்றவர்களுக்கும் எதுவிதமான விழைவோ தேவையோ இல்லை. [அதனால், இங்கே பேசுவதற்குச் சம்பந்தமில்லாத வலைப்பதிவர் பட்டறை தொடர்பான அநாமதேய, அன்னியோன்யநேய(ர்)ப் பின்னூட்டங்களும் என் இவ்விடுகையின் தேவைக்கும் என் சொந்தத்தேவைக்கும் அநாவசியமானவையென்பதாலே, அனுமதிக்கப்படமாட்டா]

3. இங்கே இவ்விடுகைக்குப் பயன்படுத்தியிருக்கும் தரவுகளைத் தந்த நண்பர் தன் பெயரை வெளியிடலாமென அனுமதி தந்திருந்தாலுங்கூட, அநாவசியமாக நான் வெளியிடவிரும்பவில்லை. என் தரவுகளிலே தவறென எதுவிருந்தாலுங்கூட, ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டப்படும்போது, வழக்கம்போல திருத்திக்கொள்வேன்.

4. என் தொடரான "அம்புடன் மாலனுக்கு அல்ல (அ) மாலடியார் அஞ்ஞானக்கும்மி மறுப்பு" உடன் தொடர்புள்ளதென்றாலுன்கூட, அதன் பகுதியாக இவ்விடுகை எழுதப்படவில்லை



பின்புலம்


கோ. சுகுமாரனின் ஆனந்தவிகடன் செவ்வியொன்றினை மேற்கோளிட்டு, "மக்கள் பங்கு பெறாத புரட்சியினால் பயனில்லை" எனச் செல்வநாயகி இட்ட இடுகையின் பின்னூட்டத்திலே, பதிவர் சந்திப்புக்குப் பதிலளிக்கும் வகையிலே, இந்தியா/தமிழ்நாட்டின் மரபுசார் மார்க்ஸியக்கட்சியின் தலைமைப்பீடங்கள்-தொண்டுத்தோழர்கள் இடையேயான வித்தியாசத்தினைச் சுட்டிக்காட்டும்போது, இந்து இராம் அவர்களின் சீனச்சார்பு மார்க்ஸியம்.எதிர்.அமெரிக்காவினைப் பயன்படுத்துதல் என்ற இரட்டைத்தன்மையைச் சுட்ட "......இப்போதுதான், செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் முதலாளித்துவ அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே பத்தி(ரிகை)த்துறையிலே மினுங்குவதாக வாசிக்கின்றோமே? இது காலகாலமாகத் தவங்கிடந்து பெற்ற புரட்சியில்லையா? இத்தகைய தலைவர்களின் காத்திருந்த புரட்சியின் பின் வாலைப் பார்த்திருந்த பஞ்சாலைத்தொழிலாளர்களோ தெலுங்கானா விவசாயிகளோ கடைசியாகத் தங்கள் நிலையை உலகுக்குச் சுட்டுவதற்காகத் தற்கொலை செய்து போராடுவதுதான் புரட்சி முழுமையடைந்தது என்பதா? அல்லது..... சேவையின் விருதாக அந்நிய நாடொன்றின் லங்கா ரத்னா விருதைப் பெறுவதும் சிறை மீண்ட இருள்நீக்கி சுப்பிரமணியத்தைக் காத்திருந்து காரிலே ஏற்றிப்போவதுமேதான் காத்திருந்த புரட்சியி(டி)ன் ஈடேற்றமா? என்னத்தைக் கிழித்தீர்கள்? நீங்கள் ஐம்பதாண்டுகள் பண்ணிக் கிழிக்காததைத்தான் நக்ஸலைட்டுகள் கடந்த பத்தாண்டுகளேனும்..." என்று எழுதியிருந்தேன்.
இதற்கு, மாலன் வலைநெறிவசப்பட்டு, "அந்த சூழ்நிலைகளில் அவனது கருத்தை தங்களது மாற்றுக் கருத்துக்கருத்துக்களை வைத்து ஆராய்வது, விமர்சிப்பதுதான் முறையானது. ஆனால் பொதுவாகத் தமிழ்நாட்டில், தமிழ்ச் சமூகத்தில், தமிழ்மணத்தில் என்ன நடக்கிறது என்றால், அந்த அறிவுஜீவியை அவனது சொந்த வாழ்க்கை, குடும்பம், ஜாதி இவற்றின் அடிப்படையில் தனிமனிதத் தாக்குதல்களைத் (இந்த்த் தாக்குதல் வசையாகத்தான் இருக்க வேண்டியதில்லை, எள்ளலாகக் கூட இருக்கலாம்) தொடுத்து அவர்களை devalue செய்கிற முயற்சி நடக்கிறது. அப்படி devalue செய்வதன் மூலம் அவர்களது கருத்துக்களை மதிப்பிழக்கச் செய்யலாம் எனவும் சிலர் கருதிக் கொள்கிறார்கள். அதை உங்களைப் போன்றவர் அனுமதிப்பதும் வியப்பளிக்கிறது. உதர்ரணமாக, புரட்சி எது, குறுங்குழு வாதம் எது என்று சுகுமாரனின் கருத்துக்களை முன்வைத்து நடக்கும் இந்த விவாதத்தில் ராமின் மகள் கொலம்பியா பல்கலையில் தன்படிப்பில் சிறந்தை, பெயரிலி எள்ள்ல் தொனியில் கிண்டலடிக்கிறார். அதற்கும் இந்த விவாதத்திற்கும் என்ன சம்பந்தம்? ராமிற்கே கூட என்ன சம்பந்தம்? அவர் மார்க்சிஸ்ட் கட்சியின் போக்கைத் தீர்மானிக்கிற பொலிட்பீரோ உறுப்பினரா? மார்க்சிஸ்ட் கட்சி பற்றிய விவாதத்தில் அவரை அவ்ர் மகளை, அவர் தாத்தா வரை இழுத்து ஏகடியும் பேசுவது முறைதானா? அது இந்த விவாதத்திற்கு எந்த விதத்தில் பயனளிக்கும்?" என்று செல்வநாயகியிடம் கேட்டு எழுதியிருந்தார்.

செல்வநாயகி அவ்விடுகை திசைதிரும்புவதாகக் கருதியதாகத் தெரிவதால், மேற்கொண்டு பின்னூட்டங்களை நிறுத்திவைப்பதாகக் கூறினார். அதன் பின்னால், என் உதாரணத்துக்கான காரணத்தை, செல்வநாயகியின் "அறிவுசீவிகளும் சாகக்கொடுக்கும் உயிர்களும் இடுகையின் பின்னால், "மாலன் சந்திப்புக்கான என் பதிலிலே இந்து ராம் ஐயங்காரின் மகள் குறித்து எதற்காகச் சுட்டியிருக்கின்றேன் என்பதைக் கவனிக்கவில்லை (என்றே இப்போதைக்குக் கருதிக்கொள்கிறேன்). அது சீனச்சார்பு கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டு, சீன அரசின் விருந்தினராக திபெத் போய் வந்து கட்டுரை எழுதியவர், மகளைமட்டும் முதலாளித்துவத்தினை முன்வைக்கும் கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய முரணைச் சுட்டுவதற்கு. மாலன் வசதியாக இதனைத் தவிர்த்துவிட்டுத் தன் வாதத்தினை வைக்கின்றார். இதே தனிப்பட்டவர்களின் வாழ்க்கைமீதான எள்ளல் (வசை?/அவதூறு) இனை சன் தொலைக்காட்சியின் செய்திகள் எதிர்க்கட்சிகளிலோ, குமுதம் நடிகைகள் வாழ்க்கை பற்றி எழுதும்போதோ பயன்படுத்தாதிருப்பினுங்கூட, நான் இங்கே முரணையும் ராமின் பொய்த்தன்மையையும்சுட்டச் சொன்னதைத் தவறென்று வைத்துக்கொண்டு விமர்சித்திருக்கலாம்." என்று விரிவாகத் தந்து, என் இடுகை கரைவு -9 இன் பின்னூட்டத்திலும் தந்திருந்தேன். மீண்டும், என் கரைவு - 10 இடுகையிலே கூற்று 4 ஆக, "சீன அரசின் சார்புநிலைப்பாட்டோடு திபெத்தின் சுதந்திரத்தேவையினைத் தாக்கியெழுதும் இந்து இராமின் மகள் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே படிக்கின்றார்" என்ற அர்த்தத்திலே நான் சந்திப்புக்குப் பதிலாகச் செல்வநாயகியின் பதிவிலே சுட்டிக்காட்டியது, மாலனுக்குத் தனிமனிதத்தாக்குதலும் எள்ளலுமாகிப்போனது பற்றி" வரும் இடுகையிலே இன்னும் விளக்கிச் சொல்வேன் என்றும் எழுதியிருந்தேன். இத்தனைக்குப் பிறகும், மாலன் என் இடுகைகளை வாசிக்கின்றார் என்றே கருதியிருந்தேன்.

ஆனால், சென்னைப்பல்கலைக்கழகத்திலே களமிட்டு நடந்த ஒருநாள் வலைப்பதிவர் பட்டறையிலே, வலைநெறி (வலைநன்னடத்தை என்றும் சில பதிவுகளிலே குறிப்பிடப்பட்டிருந்தது) பற்றி மாலன் பேசியிருக்கின்றார்; வலைப்பதிவுகளிலே இணையப்போகின்றவர்களுக்கு நல்லதும் அவசியமானதுமான தலைப்பு - இணையத்துக்கு அப்பாலான பெருமளவிலே ஒற்றைவழி தகவற்செலுத்துகை ஊடகங்களிலேயே பட்டறிவுமிக்க மாலன் நிகழ்த்தியிருந்தாலுங்கூட. அப்பேச்சின்போது, "கருத்துச் சுதந்திரம் பற்றியெல்லாம் பேசுறோம் அதனால இதையும் சொல்லலாம் தப்பில்லை, பெயரிலி ஒரு பதிவில் இராமைப் பற்றி பேசும் பொழுது அவருடைய மகளைப் பற்றிக் கேள்வி எழுப்பினார்" என்று சுட்டி, மேற்கொண்டு அது தொடர்பாகவும் அதற்கப்பால், ஈழத்தமிழர்கள் ஸ்ரீலங்கா கடவுச்சீட்டு வைத்திருப்பது பற்றியும் பேசியிருக்கின்றார். இஃது அவருக்கான எனது பதில்களையெல்லாம் குமுதம், இந்தியா ருடே ஆசிரியர்களுக்கான கடிதங்களாகக் கருதிக்கொண்டிருக்கின்றாரோ என்று எண்ணவைக்கின்றது. "நான் பேசுவதை மாற்றாமலே பேசிக்கொண்டிருப்பேன்; நீ வாசித்து வை; நீ என்ன சொல்கின்றாயென்று நான் கேட்டுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை; நீ என்ன நினைக்கின்றாய் என்று நான் நினைக்கின்றேனோ, அதையே நீ நினைப்பதாக அகப்படும் என்னை நம்பக்கூடியவர்களுக்கு என் பெயரையும் விலாசத்தையும் வைத்துச் சொல்லிக்கொண்டிருப்பேன்" என்பதாகத்தான் அவரின் செயற்பாடுகள் செய்யவைக்கின்றன.

இவை குறித்து 'ஓசை' செல்லா அவரது இடுகையொன்றிலே, மாலனின் உரையினையும் ஒலிப்பதிவாகப் பிறகு இடுவேன் எனக் குறிப்பிட்டிருந்ததாலே, பயன்படுத்தப்பட்ட சரியான வரிகள் கிடைக்குமென்று அவர் இடும் வரைக்கும் ஒன்றரை நாள் பார்த்திருந்தேன். ஆனால், இதுவரை செல்லா இட்டதாகத் தெரியவில்லை. ஏற்கனவே மோகன்தாஸும் மா. சிவக்குமாரும் இது குறித்து சிவக்குமாரின் இடுகையொன்றின் பின்னான பின்னூட்டங்களிலும் லக்கி லுக், பதிப்பெழுத்தாளர்கள், இணையத்திலில்லாதிருத்தல் பற்றி மாலனிடம் அவரின் பதிவுப்பின்னூட்டத்திலும் பேசிய பின்னால், மாலன் பேசியவை, ஒலிப்பதிவாகவோ, முழுமையாகவோ இணையத்திலே எல்லோரும் கேட்கவென வருமென்ற நம்பிக்கை குறைந்திருக்கின்றது. மேலும், மா. சிவக்குமாரின் "எவரைப் பற்றி இவர் இப்பட்டறையிலே வலைநெறி உரையிலேகூடச் சொன்னால் எனக்கென்ன?" என்பதுபோலவே அர்த்தம் தரும் ""கேள்வி கேட்கும் விவாதங்களால் புல் முளைக்கக் கூடப் பலன் இருக்காது என்பது என் கருத்து" என்ற அலட்சியத்தன்மையுடனான வரிகள் உள்ளெழுப்பிய ஆத்திரமும் உடன் எழுதத்தூண்டுகின்றது. ஆனாலும், இனியுங்கூட, செல்லாவோ பட்டறைக்குச் சென்று மாலனின் வலைநெறி உபன்நியாசத்தினைக் கேட்ட எவராவது அவரின் உரை, தொடர்ந்த கேள்விமறுப்பு என்பன உட்பட்ட ஒலிப்பதிவினைத் தர முடியுமானால், நன்றி.

இங்கே இரண்டு விடயங்கள் பற்றி எழுத விரும்புகிறேன்.

1. மாலனின் இரட்டைநிலைப்பாடுகளும் தொடர்ச்சியான குழந்தைப்பிள்ளைத்தனமான வாதங்களையும் முன்னிட்டு;
2. மா. சிவக்குமாரினதும் வலைப்பதிவர்பட்டறை அமைப்பாளர்களினதும் ஓரளவுக்கு மாலனின் உரையின்போது, அக்கூ(ட்)டத்திலேயிருந்த ஏற்கனவே வலைப்பதிவுகளிலே மாலன்.எதிர்.-/பெயரிலி. இடுகைகளை வாசித்த பதிவர்கள் பலரினதும் எதிர்வினைகள் அல்லது எதிர்ப்பில்லாவினையின்மைகள் குறித்து

1. மாலனின் இரட்டைநிலைப்பாடுகளும் தொடர்ச்சியான குழந்தைப்பிள்ளைத்தனமான வாதங்களையும் முன்னிட்டு:

மேலே நான் ஏன் இந்து ராமின் மகளினைக் குறிப்பிட்டேன் என்பதைத் தெளிவாக விளக்கியிருக்கின்றேன். அது புரியாவிடின், மாலனின் வாதத்தினைச் சரியென ஒரு பேச்சுக்குக் கொள்வோம். அந்நிலையிலுங்கூட, இவ்விடுகையின் எல்லையயும் நோக்கையும் கருத்திலே கொண்டு, மாலனுக்கு மிகவும் எளிமையான கேள்வி; "வலைநெறி என்று பேசுகின்றவர், வலையிலே உங்களுடன் முரண்பட்ட நான் இல்லாதவிடத்து எதற்காக என் பெயரை வலைக்கு புதியவர்களிடம் உதாரணத்துக்கு எடுக்கவேண்டும்?"

மாலனின் எட்டு இடுகையிலே கோவிந்தசாமி பற்றிக் குறித்திருந்தை நான் செல்வநாயகியின் இடுகையின் பின்னூட்டத்திலேயும் என் "விட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்" இடுகையிலேயும் சொல்லியிருந்ததற்கு மாலன் தன் "அன்புள்ள பெயரிலி" இடுகையிலே, எள்ளலாக, "என் பதிவில் வந்து பின்னூட்டமிடுவது தனது தகுதிக்குக் குறைவு எனக் கருதி உங்கள் பதிவில்- மன்னிக்கவும் உங்கள் ஈகோ இன்ஜினில்- எனக்குச் சில கேள்விகளை நீங்கள் வீசியிருந்தாலும், உங்கள் பதிவில் அவற்றுக்குப் பதிலளிப்பதைப் பெறும் பேறாகக் கருதி இதனை எழுதுகிறேன்" என்று சொல்லியிருந்ததற்கு, நான் ஏன் பின்னூட்டங்கள் சிலரின் பதிவுகளிலே இடுவதில்லையென்பதையும் சொல்லியிருந்தேன் (1. பதிலுக்கு, "பின்னூட்டங்களுக்குப் பயந்ந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கத் தயங்குவது என்பதற்கும், மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தும் புத்திசாலித்தனத்திர்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஒரு வேளை என் பதிவில் பின்னூட்டம் பிரசுரமாவதில் சங்கடங்கள் இருக்குமானால், அவற்றை பிரசுரிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டு அனுப்புங்கள். இப்போது பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படுவதால் அவை மற்றவர் பார்வைக்குப் போகாது. அல்லது நீங்கள் எனக்கு மின்னஞல் அனுப்பலாம். நீங்களே சொல்வது போல அடுத்தவரின் அந்தரங்கம் கூட அறிந்து வைத்திருக்கும் பதிவுலகில் என் மின்னஞச்ல் முகவரி கிடைப்பது அவ்வளவு சிரமமாக இராது. உங்கள் பதிவிலேயே அதை நீங்கள் வெளியிட்டுக் கொள்வதும் கூட முறையானதுதான். ஆனால் அப்படிச் செய்யும் பட்சத்தில், அதனைக் குறித்த தகவலைப் பின்னூட்டப் பெட்டியிலோ, மின்னஞ்சலிலோ தெரிவித்துவிட்டால் நலமாக இருக்கும்" என்று அவர் எழுத அதற்கு, "நான் எழுதியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டதோ என அஞ்சுகிறேன். நான் பின்னூட்டமிடப் பயப்படவில்லை. ஆனால், ஒருவர் ஒரு பின்னூட்டம் இடுகை இட்டவருக்கு மாற்றாக இட்டபின்னால் அப்பதிவிலே அதைத் தொடர்ந்து பலர் ஏன் எமக்கு வம்பு என்று தம் சொந்தக்கருத்துகளையும் தெரிவிக்க அஞ்சுவதைத்தான் சொல்கிறேன் :-) ஓர் உதாரணத்துக்கு, உங்கள் முன்னைய பதிவுகளிலே பின்னூட்டம் இட்டவர்களிலே எத்தனை பேர் இங்கே பின்னூட்டியிருக்கின்றார்களெனப் பாருங்கள். இந்த இடுகை கொஞ்சம் விவகாரமான இடுகை என்று எண்ணிக்கொண்டு தள்ளி நிற்பார்கள். அதன் காரணமாகவே பல பதிவுகளின் "சமநிலை"யைக் குழப்பவேண்டாம் என சொந்தப்பெயரிலோ பெயரில்லாமலோகூடப் பின்னூட்டுவதில்லை. அதைத்தான் சொன்னேன்." என்று நான் எழுதியிருந்தேன். இப்படியாக, இருவரும் உலாவும் வலையிலேயே தன் பதிவிலே சொல்லப்பட்டதற்குப் பதில் தனக்கும் தெரிந்துகொள்ளவேண்டுமென்ற வலைநெறியை முன்வைத்தவர், நான் இல்லாத சென்னை வலைப்பதிவர்பட்டறையிலே போய் என் பெயரைக் குறிப்பாகச் சொல்லி, நான் பதில் அளிக்கமுடியாதவகையிலே நான் விளக்கங்களையோ சொல்லப்பட்ட பின்புலத்தினையோ சொல்லாமல், தன் கருத்தைச் சொல்வது - அதுவும் வலைநெறியைப் பற்றிச் சுட்டுவதற்குச் சொல்வது எவ்வகை நெறி?

சரி; இனி நான் இந்து இராமின் மகளைச் வலைச்சந்திக்கிழுத்து ஏளன சுய மந்தஹாஸம் உதிர்த்ததாகவே மாலன் வைக்கும் குழந்தைப்பிள்ளை வாதத்தைச் சரியென்றே வைத்துக்கொண்டு, அந்தக்கோட்டிலேயே பார்ப்போமே? "125 ஆண்டுப்பழமை இந்துவையா அல்லது விடுதலைப்புலிகளையா உலகம் நம்பும்?", "ஆறுமுகமாக வந்தவருக்கு நாவலர் கொடுத்தனுப்பினோம்" இவற்றிலே இல்லாத ஏகடிய ஹாஸ்யமா, அல்லது அதற்கும்மேலாக, அதே வலைநெறியிலே அவர் தொடர்ந்து சொன்ன "ஸ்ரீலங்கா பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஈழத்தமிழர்கள்" என்பதிலேயில்லாத குரூரம் ஊடோடும் எள்ளற்பரிஹாஸமா நான் சொன்னதிலேயிருக்கின்றது? அதைக்கூட விடுவோம்; செய்தியாக வந்த இராமின் மகளின் கதையை நான் பேசியிருக்கக்கூடாதென்றால், பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி ஸ்ரீலங்கா பாஸ்போர்ட் எடுக்க முயற்சிப்பதாக, இந்து மட்டும் செய்தி வெளியிடலாமா? இங்கே அப்பனுடனான தகராறுக்கு மகனை ஏன் இழுக்கின்றீர்கள் என்று மாலன், நரசிம்மன் ராமிடம் கேட்டுச் சொல்வாரா? நியாயப்படுத்தத்தான் செய்வாரா?
இதைக்கூட விட்டுவிடுவோம். வலைநெறி விரிவுரையிலே இந்து இராமின் மகள் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே படிப்பதை நியாயப்படுத்துவதற்கும் அதற்குச் சம்மந்தமில்லாமல், ஈழத்தமிழர் ஸ்ரீலங்கா கடவுட்சீட்டுடன் அலைவதைப் பற்றியிழுப்பதற்கும் எந்த நெறியேனும் இடம் கொடுக்குமா? மாலன் ஆசிரியராகவிருந்தபோது குமுதத்திலே நடிகைகள் பற்றியும் பெண்கள் பற்றியும் வந்த தரத்துக்கான சஞ்சிகைநெறியினையும் (சிம்ரனுக்கு நெருக்கமானது உள்ளாடை: லைட்ஸ் ஆன் ரங்கராஜன்) சன் தொலைக்காட்சியிலே திமுக சார் செய்திகளைமட்டுமே புகைபோக்கிபோல ஆற்றுப்படுத்தித் தந்துகொண்டிருந்த தார்மீகநடுநிலைநெறியினையும் விடவா இராமின் மகள் கொலம்பியா பல்கலைகழகத்திலே படிப்பதைச் சுட்டிய தீநெறி தேய்ந்துபோயிருக்கின்றது?

-/பெயரிலி.யை வலைநெறி வழுவியவன் என்று காட்ட எத்தனையோ கட்டற்ற உதாரணங்கள் இருக்க, உப்புச்சப்பற்ற இந்து ராம் மகளினைக் கோடி காட்டிவிட்டான் என்பதை மட்டும் திரும்பத் திரும்ப எடுப்பதிலேதும் உள்நோக்கிருக்கின்றதா, மாலன்? நான் போகாத சென்னையிலே என் "கல்யாண குணாம்சங்களை" ஏற்கனவே தெரிந்த நாற்பதுபேருக்கும் யாரோ ஒரு மூஞ்சி தெரியாத வாலும் வரியும் நிறைந்த காட்டுவிலங்கென்றுமட்டும் உங்களின் விபரிப்பினை வைத்துப் புரிந்துகொள்ளக்கூடிய புதுப்பதிவர்கள் நாற்பதுபேருக்கும் வலைத்தர்மோபதேசம் செய்வதனாலே எனக்கேதும் பாதிப்பில்லை; தெரிந்தவர்களின் என் மீதான கருத்திலே உங்களின் பாதிப்பில்லை; தெரியாதவர்களின் என் மீதான கருத்திலே எனக்கு - அவர்கள் இணையத்திலே சேர்ந்து அறியாதவரைக்கும் - பாதிப்பில்லை. இஃது உங்களுக்கும் தெரியும். ஆனாலும், நீங்கள் அங்கே இந்து ராம் மகள், ஈழத்தமிழர், ஸ்ரீலங்கா விசா என்று பூதத்தைக் கிண்ட முயன்றது, தனியே என்மீதான உங்கள் காழ்ப்புணர்விலேயில்லை என்றே நினைக்கிறேன். வந்திருப்பவர்களிலே இணையத்திலிருக்கும் ஈழத்தமிழர்கள் பற்றிய தவறான கருத்தினைப் பதிய வைக்க விரும்பியிருக்கலாம். இல்லாவிட்டால், மிகச் சிறந்த பொருத்தமான, வலைப்பதிவர் பட்டறைக்கு வந்திருந்த, முன் நின்று நடத்திய பலருமே தெளிவாகச் சாட்சியம் கூறியிருக்கக்கூடிய சல்மா அயூப் விவகாரம் எப்படியான வலைநெறி பிறழ்வென்று உங்களாலே காட்டியிருக்கமுடியாதா, என்ன? சல்மா அயூப் என்பவர் வலைப்பட்டறை நிகழ்வினை முன்நின்று நடத்திய ஒருவரைப் பாதித்ததைவிடவுமா, சந்திப்புக்கு கொலம்பியா பல்கலைக்கழகத்திலே ராமின் மகள் படிக்கின்றார் என்று நான் சொன்னது உங்களுக்கு மிகவும் நெறிபிறழ்வாகப் போய்விட்டது? நிச்சயமாக, இத்துணை பத்திரிகைப்பட்டறிவுள்ள உங்களுக்கு அது தெரிந்திருக்கும். அதன் பிறகும் நீங்கள் இந்து_இராம்_அவரின் மகள்_ஈழத்தமிழர்_இணையம்_ஸ்ரீலங்கா பாஸ்போர்ட் என்ற சொற்களினாலே மத்தியதட்டுப்புதுப்பதிவர்களுக்கு ஒரு பயமுறுத்தல் தமிழகத்திலே உருவாக்க முயன்றீர்களென்றால், அது நிச்சயமாக எதேச்சையானதல்ல; இந்து தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசுக்காக, ஈழத்தமிழரைப் பற்றித் தமிழக மத்தியதட்டின் மூளைக்குள்ளே நுழைத்துச் செய்து வரும் அதே தந்திரப்பூச்சாண்டியைத்தான் நீங்களும் உங்களுக்கு வாய்ப்பான இடங்களிலெல்லாம் எப்படிச் செய்கின்றீர்கள் என்பதை மிகவும் தெளிவாகக் காட்டியிருக்கின்றீர்கள். எதற்கு உங்களுக்கு ஈழத்தமிழர்கள்மீது இத்துணை காழ்ப்புணர்வு?

2. மா. சிவக்குமாரினதும் வலைப்பதிவர்பட்டறை அமைப்பாளர்களினதும் ஓரளவுக்கு மாலனின் உரையின்போது, அக்கூ(ட்)டத்திலேயிருந்த ஏற்கனவே வலைப்பதிவுகளிலே மாலன்.எதிர்.-/பெயரிலி. இடுகைகளை வாசித்த பதிவர்கள் பலரினதும் எதிர்வினைகள் அல்லது எதிர்ப்பில்லாவினையின்மைகள் குறித்து

தமிழ்நாட்டிலேயிருக்கும் பெரும்பான்மையான தமிழ்ப்பதிவர்களுக்கு என்னைப் பற்றி (ஏற்படுத்தப்பட்டு) இருக்கும் கருத்துகளைப் புரிந்துகொள்கிறேன். அதனால், பட்டறையிலே மாலன் பேசியபோது, அதனைத் தட்டிக்கேட்கவேண்டிய அவசியமின்றி, "நமக்கேன் வம்பு?" என்றோ "நன்றாகச் சொல்லட்டும்" என்றோ இருந்துவிட்டுப் போயிருக்கவும் வாய்ப்பிருக்கின்றது. அதையும் புரிந்துகொள்கிறேன். இது கூடல் (conference) அல்ல, குலை(த்)தல் அல்லது கூடாமை (unconfernce) என்பதாலே, அமைப்பாளர்களுக்குப் பேசப்போகின்றவர்கள் இதைத்தான் பேசப்போகின்றோமென ஆரம்பத்திலேயே சுருக்கம் கொடுத்திருக்கவேண்டிய நிலைமையுமில்லை என்பதையும் புரிந்துகொள்கிறேன். மாலன் பேசியபின்னால், அது பதிவாகி வராதுபோனால், அதைப் பற்றி மாலன் கூறிய தனியாளோ, குழுவினரோ அறிந்துகொள்ளவேண்டிய அவசியமோ சிக்கலோ எவருக்குமில்லையென்றே மட்டுறுத்துனரும் அங்கே கூ(ட்)டத்திலே இல்லாத, பின்னாலே அறிந்திருக்கக்கூடிய மற்றைய அமைப்பாளர்களும் பட்டறையின் நல்ல விளைவுகளிலேயே கருத்தினைச் செலுத்தி, நம்பிக்கையைப் பரப்பும் தேவையிருப்பதையும் புரிந்துகொள்கிறேன்.

ஆனால், மாலனைத் தொடர்ந்து பேசவிட்டுவிட்டு, அவரிடம் கேள்வி கேட்க முயன்றவரை மட்டும் மட்டுறுத்துனர் தடுப்பது எவ்வகை வலை(ப்பதிவர் பட்டறை)நெறி? குறைந்தபட்சம், அது தவறென்றாவது எழுதியோ அல்லது மாலனிடம் சுட்டிக்காட்டியோ இருந்திருந்தால், வலை(ப்பதிவர் பட்டறை) நெறி பற்றி புதுப்பதிவர்களுக்கில்லாவிடினும், அமைப்பாளர்களின் சக பழைய பதிவர்களுக்கேனும் ஏற்பட்டிருக்குமல்லவா? திட்டமிட்டே இதையெழுதக்கூடாததுபோல, எந்த அமைப்பாளரும் சுட்டவில்லை. சரி, சுட்டி ஒருவர் வலையிலே காட்டியபின்னுங்கூட, "கேள்வி கேட்கும் விவாதங்களால் புல் முளைக்கக் கூடப் பலன் இருக்காது என்பது என் கருத்து" என்பது கொஞ்சம் நிர்த்தாட்சணியமற்ற அராஜகவலைநெறிக்கூற்றாகப்படவில்லையா? இதற்கெல்லாம் மேலாக, வலைப்பதிவுகளிலே சக ஈழத்துப்பதிவர்களின் நாளாந்த (எனக்கே புளித்தோ விறைத்தோ போன) சாதாரண சா ஓலத்துக்கும் கூடவிருந்து ஒப்பாரி வைத்தோ ஆறுதல் சொல்லியோ பின்னூட்டம், முன்னூட்டம் தரும் தமிழகவலைப்பதிவர்களிலே மோகன்தாஸ், செல்லா, இராம.கி போன்ற ஓரிருவர் தவிர மீதி எவருமேகூட, மாலன் கூறுவதை அவ்விடத்திலே நிறுத்தியோ அல்லது அதன்பின்னாலே சுட்டியோ அவரின் வலைநெறிமீறலையும் சொந்த அரசியல் ஊசிகுத்தல்களையும் வந்திருக்கும் புதுப்பதிவர்களுக்குச் சுட்டிக்காட்டியிருக்கமுடியாமற்போய்விட்டது? இப்படியான சூழல்களிலே தமிழகத்தின் சக மக்களிடம் ஈழத்தமிழர்களின் நியாயமான பக்கத்தினை மாலன், இராம் போன்றவர்களின் ஊடகவலிமையையும் மீறிச் சொல்லமுடியாதிருக்கும் நண்பர்கள், வலைப்பதிவிலே மட்டும் ஆறுதல் சொல்வதாலே நடைமுறையிலே என்ன பலன் கிட்டுமென்று நினைக்கின்றீர்கள்? எல்லாவற்றுக்கும்மேலாக, வலைப்பதிவர் பட்டறைகள் இப்படியான செயற்பாடுகளினால் புதிதாக வரக்கூடிய பதிவர்களின் மூளைப்பதிவுகளிலே வலைப்பதிவுகள் பற்றித் தவறான கருத்துகளை ஏற்படுத்தி,, தம் கால்களிலே தாமே சுட்டுக்கொள்ளும் விளைவினையே ஆகின்றன என்று தோன்றவில்லையா ? இவை பற்றி எனக்குக் கவலையில்லை. அது பட்டறை அமைப்பாளர்களின் கவலை; நாளைக்கு இன்னோர் இடத்திலே பட்டறை வைப்பவர்கள், இதே மாதிரியாக வலைநெறியைப் பேசக் கேட்க, சென்னையிலே மீறப்பட்ட வலை(ப்பதிவர் பட்டறை)நெறியையே உதாரணம் எடுத்து யாராவது புதுப்பதிவர்களுக்கு வலைநெறிமீறலைச் சொல்கின்றபோதுதான் பட்டறை அமைப்பாளர்களாலே புரிந்துகொள்ளப்படுமெனத் தோன்றுகின்றது.

வலைப்பதிவர் பட்டறையைத் திட்டமிட்டு நடத்தி முடிப்பதென்பது மிகவும் சிக்கலான, பொறுப்புமிகுந்த, பன்நோக்குடனான காரியமேதான்; அதிலே இப்படியான ஒரு வலைநெறிமீறல் ஒரு பெரிதான அலட்டிக்கொள்ளும் விடயமேயல்ல; அதனால், இதனைப் பெரிதுபடுத்தி, இவ்விடுகையை இட்டதாக எண்ணக்கூடாது. தவிர, தனிப்பட மாலன் என்னை நான் இல்லாத இடத்திலே இழுத்துப்பேசியது குறித்தும் எனக்கு வருத்தமில்லை; தினசரி சட்னிவடை உறவினர்கள், நண்பர்களின் நலன் கேட்டு அனுப்பும் பின்னூட்டங்களைவிடவா மாலன் பெரிதாகத் தொந்தரவு கொடுக்கின்றார்? :-) சொல்லப்போனால், அவரின் பொய்யான முகத்தோலை மேலும் உரித்துக்காட்ட வாய்ப்பென்று மகிழ்ச்சியே. ஆனால், இனியேனும், வலைப்பதிவர் பட்டறை அமைப்பாளர்கள் இப்படியான ஈழத்தமிழர்களை ஏகடியம் செய்யும் மாலனின் உரை போன்ற நெறி போதிக்கும் போர்வையுரைகளைத் தவிர்க்கும்முகமாகப் பேசப்போகின்ற உள்ளடக்கங்களைக் கேட்டுக்கொள்வது பயனானதும் நியாயமானதுமாகும். ஏற்கனவே தமிழகத்தமிழர்கள் மத்தியிலே இந்தியா ருடே, சன் டீவி, தி இந்து போன்றவை ஏற்படுத்தி வைத்திருக்கும் ஈழத்தமிழருக்கு வாலும் வரியுமிட்ட விலங்குவடித்தினை இன்னமும் பயமுறுத்தும்வகையிலே மாலன் போன்றவர்கள் செய்ய அனுமதிப்பது எவ்வகைப்பட்டறை நடத்தும் தர்மத்தின் அடிப்படையிலுங்கூட நியாயமாகாது.